விநாயகர் சிலை வழிபாடு: பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வழிபாடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வழிபாடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், விநாயகர் சிலை வழிபாட்டுக் குழுவினர், பொதுமக்கள், காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
திங்கள்கிழமை (செப்.2) விநாயகர் சதுர்த்தியின் போது, சிலைகள் வைத்து வழிபடுவதில் சட்ட விதிமுறைகளை கடைப்பிடித்தல் தொடர்பாகவும், தொடர்ந்து புதன்கிழமை (செப்.4) சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தின்போது, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். விநாயகர் சிலைகள் வழிபாட்டு இடங்கள், கரைக்கும் இடங்கள், சாலை வழிகளில் பாதுகாப்பு ஏற்படுத்தவும் உரிய ஆலோசனைகளை கூட்டத்தில் வழங்கினர்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சரவணக்குமார் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள்,  காவல் ஆய்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செஞ்சி: இதேபோல, செஞ்சியில் விநாயகர் சதுர்த்தி விழா வழிபாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சரவணக்குமார், செஞ்சி டி.எஸ்.பி. நீதிராஜ், செஞ்சி வட்டாட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சி எஸ்.ஐ. மருது வரவேற்றார்.
கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 2,550 விநாயகர் சிலைகள் அமைக்கப்படவுள்ளன. 
புதிதாக  சிலைகள் வைக்க அனுமதி இல்லை. அவலூர்பேட்டையில் செப்டம்பர் 4-ஆம் தேதியும், செஞ்சியில் 6-ஆம் தேதியும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் என்றார்.
கூட்டத்தில், காவல் ஆய்வாளர்கள் ஜீவராஜ்மணிகண்டன், சுதா, சீனுவாசன், துணை ஆய்வாளர்கள் ராஜேஷ், ராஜேந்திரன், பேரூராட்சி சார்பில் ரமேஷ் மற்றும் விநாயகர் சிலை அமைப்பாளர்கள், இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com