சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் விவசாயி உள்பட இருவர் உயிரிழந்தனர்.
    விக்கிரவாண்டி அருகே சின்னமணியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் முருகன்(24). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். 
    இவர், புதன்கிழமை சென்னையிலிருந்து ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். பாப்பாப்பட்டு என்ற இடத்தில் வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. 
    இந்த விபத்தில் முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
      சடலத்தை விக்கிரவாண்டி போலீஸார் மீட்டு, உடல் கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
    மற்றொரு சம்பவம்: மயிலம் அருகே பஞ்சாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் சாமிக்கண்ணு(35), விவசாயி. இவர், செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில்,  பஞ்சாலத்திருந்து பாதிராபுலியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். 
    அப்போது, இவரது இரு சக்கர வாகனத்தின்மீது கார் மோதியது. இதில்,சாமிக்கண்ணு உயிரிழந்தார். மயிலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai