ஏழை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

விழுப்புரம் வி.மருதூர் ஏழை மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.  

விழுப்புரம் வி.மருதூர் ஏழை மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.  
விழுப்புரம் வி.மருதூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஏழை மாரியம்மன் கோயிலில் புனரமைப்புப் பணிகள் தொடங்கி அண்மையில் நிறைவடைந்தன.
இதனையடுத்து கும்பாபிஷேகம் விழா செப். 8-ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.  9-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து,  3 கால யாக பூஜைகளும், ஹோமங்களும் நடைபெற்றன.  புதன்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது.  தொடர்ந்து, காலை 9 மணிக்கு யாத்ரா தானமும்,  ஹோமங்களும் நடைபெற்றன. 
10 மணிக்கு கடம் புறப்பாடாகி புனித நீர் கொண்டு வரப்பட்டு, கோயில் கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
 பின்னர், சுவாமிக்கு தீபாராதனை,  வழிபாடுகள் நடைபெற்றன.  விழுப்புரம் நகரைச் சேர்ந்த பொது மக்கள் விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மருதூர் மக்கள்,  கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com