விவசாய கிராமப்புறத் தொழிலாளர்கள் சங்கத்தினர் பிரசாரம்

அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கத்தினரின் பிரசார இயக்கம் தொண்டூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கத்தினரின் பிரசார இயக்கம் தொண்டூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
பிரசார இயக்கத்தை மாவட்டத் தலைவர் சுசிலா தொடக்கிவைத்தார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டச் செயலர் மா.வெங்கடேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கொளஞ்சிநாதன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்டச் செயலர் செண்பகவள்ளி, மாவட்டக் குழு உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து நிலமற்ற குடும்பங்களுக்கும் குறைந்தபட்சம் 5 சென்ட் நிலம் வழங்கிட வேண்டும். 
ஆதிவாசிகள், காடுகளில் வசிக்கும் இதர குடிமக்களுக்கு வன உரிமைப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கி, தேவையான உணவுப் பொருள்களை வழங்கிட வேண்டும். கிராமப்புற ஏழைகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும். முதியோர் ஓய்வூதியத்தை மாதம் ரூ.5 ஆயிரமாக உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பிரசார இயக்கம் தொடர்ந்து மேல்ஒலக்கூர், முக்குணம், அகலூர், அம்மாகுளம், ஈச்சூர், நெகனூர், மேல்களவாய், செஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com