சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
    விழுப்புரம் மந்தக்கரை பகுதியைச் சேர்ந்த மாப்பிள்ளை மொய்தீன் மகன் அபுதாகீர்(45). இவர், புதன்கிழமை இரவு தனது மனைவி ஜெசியாபானுவுடன் (38) முத்தாம்பாளையம் பகுதியில் உள்ள புறவழிச்சாலைப் பகுதிக்குச் சென்றார். அங்கு இருவரும் சாலையைக் கடக்க முயன்றபோது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார், அபுதாகீர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அபுதாகீர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
    தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று அபுதாகீரின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மற்றொரு சம்பவம்: விக்கிரவாண்டி அருகே மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் செல்வம் (40). இவர், தனது மனைவி பிரேமாவை (35) இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு பேரங்கியூரில் இருந்து கரும்பூருக்கு புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார்.
    பேரங்கியூர் பகுதியில் உள்ள அரிசி அரைவை ஆலை முன் சென்றபோது, எதிரே வந்த கார், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரேமா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். செல்வம் பலத்த காயமடைந்தார்.
    தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸார், நிகழ்விடத்துக்குச் சென்று செல்வத்தை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பிரேமாவின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai