சுடச்சுட

  

  கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபாலசுப்பிரமணியர்,  ஸ்ரீமுனியப்பன், அம்மன், ஸ்ரீஅங்காகளபரமேஸ்வரி,  ஸ்ரீசப்த கன்னிமார் சுவாமிகளுக்கு பொங்கல் வைத்து 
  முப்பூசை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
  விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை கோயிலில் பொங்கல் வைப்பதற்காக கருணாபுரம் பகுதியில் உள்ள பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.  பின்னர், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
  இதைத் தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து, முப்பூசை செய்து வழிபட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கருணாபுரம் மேல்சாலைப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் செய்திருந்தனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai