சுடச்சுட

  

  கள்ளக்குறிச்சி கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்துகளைத் தடுப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
  சார்-ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சார்-ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். சின்னசேலம் வட்டாட்சியர் சு.இந்திரா வரவேற்றார்
  கூட்டத்தில் நகராட்சி, மின் வாரியம், காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துறை கிளை மேலாளர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், அரிமா, ரோட்டரி, எப்.எஸ்.எஸ், சுங்கச்சாவடியினர், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
  நிகழ்ச்சியில் சார்-ஆட்சியர் ஸ்ரீகாந்த் பேசுகையில், இருவழிச் சாலை, நான்கு வழிச் சாலை என பதாகைகள் ஏதும் இல்லை. புறவழிச் சாலை, மேம்பாலம் போன்றவற்றில் மின் விளக்குகள் எரிவதில்லை. இது வழிப்பறியில் ஈடுபடுவர்களுக்கு வசதியாகிப் போகிறது.
  சாலையோரம் மற்றும் நடுவில் போடப்படும் வெள்ளைக் கோடுகள் மங்கிய நிலையில் உள்ளன. 
  கள்ளக்குறிச்சி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பாதசாரிகள் நடந்து செல்ல நடைமேடை அமைக்க வேண்டும். 
   சேலம்-சென்னை நெடுஞ்சாலை, தியாகதுருகம் சாலை, சங்கராபுரம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கித் தரவேண்டும். 
   ஆட்டோவில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும், சரக்கு வாகனத்தில் ஆள்களை ஏற்றிச் செல்வதற்கும் தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கருத்துகளை வலியுறுத்தினார்.
  கூட்டத்தில், டிஎஸ்பி ந.ராமநாதன், நகர கட்டமைப்பு ஆய்வாளர் எஸ்.தாமரைச்செல்வன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் கே.நீதிதேவன், மோட்டார் வாகன ஆய்வாளர் செ.சிவக்குமார், கள்ளக்குறிச்சி போக்குவரத்து கிளை மேலாளர்கள் வி.மணிவேல், எம்.மஞ்சுநாதன், கூடுதல்  வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு, மின்சார வாரிய உதவி மின் பொறியாளர் ஜி.முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai