சுடச்சுட

  

  மதுரை, தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் ஆனந்த்பாபு(33). சென்னை, நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் கலவை தயாரிக்கும் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிகிறார். இவர், உளுந்தூர்பேட்டையில் உறவினரின் ஒருவரது திருமணத்துக்குச் செல்வதற்காக, இரு சக்கர வாகனத்தில் சென்னையிலிருந்து புதன்கிழமை இரவு புறப்பட்டார். 
  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியில் வந்தபோது,  இரு சக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்தி, செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத 4 இளைஞர்கள், திடீரென  ஆனந்த்பாபுவின் இடுப்பு, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரிடம் இருந்த செல்லிடப்பேசி, ஏடிஎம் அட்டை, ரூ.7,600 ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர்.  
  மயிலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai