கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
By DIN | Published On : 19th September 2019 07:31 PM | Last Updated : 19th September 2019 07:31 PM | அ+அ அ- |

வந்தவாசி அருகே கல்லூரி மாணவி ஒருவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வந்தவாசியை அடுத்த கோதண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் மகள் சுமித்ரா(21). வந்தவாசியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்த இவா், கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இதற்காக தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த இவரால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லையாம்.
இந்த நிலையில் நேற்றுஅதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, சுமித்ரா தனது அறையில் தன்மீது மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டாராம். இதில் சுமித்ரா உடல் கருகி உயிரிழந்தாா். தகவலறிந்த வடவணக்கம்படி போலீஸாா் சம்பவ இடம் சென்று சுமித்ராவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சுமித்ராவின் தாய் ஜோதி அளித்த புகாரின் பேரில் வடவணக்கம்படி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.