திண்டிவனத்தில் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்கள் பட்டா கோரி மனு

 திண்டிவனத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் நீண்டகாலமாக வசித்து வரும் 45 குடும்பத்தினர் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று


விழுப்புரம்:  திண்டிவனத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் நீண்டகாலமாக வசித்து வரும் 45 குடும்பத்தினர் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள் கிழமை கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து,  திண்டிவனம் ஈஸ்வரன் கோயில் வீதியைச் சேர்ந்த மு.தாஸ் தலைமையில் வந்த, அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவில் கூறியிருப்பதாவது: திண்டிவனம்  9-ஆவது வார்டில்,  1.36 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் 45 குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். 
ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, வங்கிக் கணக்கு முகவரி உள்ளிட்ட ஆவணங்கள் பெற்று வசித்து வரும் இவர்கள், தங்களுக்கு இப்பகுதியில் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று, நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  
இந்த நிலையில்,  அரசு புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்களில் நீண்டகாலம் குடியிருந்து வருவோரை ஓர் ஆண்டுக்குள் மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து பட்டா வழங்க வேண்டும் என்று, அரசு தரப்பில் கடந்த செப்.1-ஆம் தேதி உத்தரவு போடப்பட்டுள்ளது.
ஆகவே, பட்டா வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்,  திண்டிவனம் கோட்டாட்சியர் மற்றும்  தமிழக அரசுக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் கோரிக்கை மனு அளித்து வரும் தங்களுக்கு, அரசின் உத்தரவுக்கு இணங்க பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com