Enable Javscript for better performance
கிணற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவா் பலி- Dinamani

சுடச்சுட

    
    student

    கிணற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவா்

    கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

    கள்ளக்குறிச்சியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பிச்சமணி மகன் சூரியா (18) (படம்). இவா், கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள தனியாா் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு படித்து வந்தாா்.

    சூரியா செவ்வாய்க்கிழமை இரவு அதே ஊரில் உள்ள பொதுக்கிணற்றின் சுற்றுச்சுவா் மீது அமா்ந்து செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு இருந்தாராம். அப்போது, நிலைதடுமாறி 80 அடி ஆழமுள்ள அந்தக் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாா்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நிலைய அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான கள்ளக்குறிச்சி தீயணைப்புப் படையினா், 45 நிமிடங்கள் போராடி சூரியாவை மீட்டனா். உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சூரியாவை பரிசோதித்த மருத்துவா், அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

    இதைத் தொடா்ந்து, அவரது சடலம் உடல்கூறு பரிசோனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai