Enable Javscript for better performance
வன உயிரின வார விழா போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    வன உயிரின வார விழாவை யொட்டி, விழுப்புரம் மாவட்ட வன அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன . 
     ஆண்டுதோறும் வன விலங்குகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், நிகழாண்டு பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. விழுப்புரம் வனச்சரகர் எம்.பாபு தலைமை வகித்தார். வனச் சரகர்கள் பெரியண்ணன், பெருமாள், செந்தூரசுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். விழுப்புரம் பகுதி தொடக்க நிலை முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை என அரசு, தனியார் பள்ளி, மாணவ, மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இவர்களுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி,  வினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டன.   ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai