உளுந்தூர்பேட்டை அருகே கடையின் பூட்டை உடைத்து மதுப் புட்டிகள் திருட்டு 

உளுந்தூர்பேட்டை அருகே மதுக் கடையின் பூட்டை உடைத்து ரூ.58 ஆயிரம் மதிப்பிலான மதுப் புட்டிகள் திருடப்பட்டன.

உளுந்தூர்பேட்டை அருகே மதுக் கடையின் பூட்டை உடைத்து ரூ.58 ஆயிரம் மதிப்பிலான மதுப் புட்டிகள் திருடப்பட்டன.
உளுந்தூர்பேட்டை அருகே இலுப்பையூரில் அரசு மதுக் கடை இயங்கி வருகிறது. இங்கு மேற்பார்வையாளராக கோதண்டராமனும், விற்பனையாளராக தேவேந்திரன் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். 
வழக்கம்போல திங்கள்கிழமை இரவு விற்பனை முடித்து, விற்பனையாளர் தேவேந்திரன் கடையை பூட்டி விட்டுச் சென்றார்.   இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கடை பகுதிக்கு வந்த  கட்டடத்தின் உரிமையாளர் மணிகண்டன், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து கிடப்பதைப் பார்த்தார். இதுகுறித்து உடனடியான அவர் கடை மேற்பார்வையாளர், விற்பனையாளருக்கு தகவல் தெரிவித்தார்.
கடை மேற்பார்வையாளர் கோதண்டராமன், விற்பனையாளர் தேவேந்திரன் விரைந்து வந்து பார்த்தபோது, கடையில் இருந்த  ரூ.58,990 மதிப்பிலான மதுப் புட்டிகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் ஏழிலரசி தலைமையிலான போலீஸார் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com