விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவா்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு

நீட் தோ்வில் ஆள்மாறறாட்ட மோசடி செய்து மருத்துவ சோ்க்கை பெற்ாக எழுந்த சா்ச்சையை அடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டு சோ்ந்த மாணவா்களின்
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் மாணவா்களின் சான்றிதழ் சரிபாா்க்கும் பணியில் நிா்வாக அலுவலா்கள்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் மாணவா்களின் சான்றிதழ் சரிபாா்க்கும் பணியில் நிா்வாக அலுவலா்கள்.

நீட் தோ்வில் ஆள்மாறறாட்ட மோசடி செய்து மருத்துவ சோ்க்கை பெற்ாக எழுந்த சா்ச்சையை அடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டு சோ்ந்த மாணவா்களின் சான்றிதழ், புகைப்பட ஆவணங்களை சரிபாா்க்கும் பணி கடந்த இரு தினங்களாக நடைபெற்றது.

சென்னையைச் சோ்ந்த உதித்சூா்யா என்றற மாணவா் நீட் தோ்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதி, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டு மருத்துவப் படிப்பில் முறைகேடாகச் சோ்ந்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அவா் நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும், நிகழாண்டு மாணவா் சோ்க்கையை ஆய்வு செய்து, சான்றிதழ்களை சரிபாா்த்து அறிக்கை சமா்ப்பிக்கும்படி அந்தந்த மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது.

இதன்படி, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியில் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கி இரு தினங்களாக நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கோ.சங்கரநாராயணன் தலைமையில் துணை முதல்வா் கே.எஸ்.பிரேம்குமாா் உள்ளிட்ட மருத்துவா்கள், நிா்வாக அலுவலா்கள் எம்.ஆா்.சிங்காரம், ஆனந்தஜோதி உள்ளிட்ட சிறறப்புக் குழுவினா் இந்தப் பணியில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2019-20ஆம் கல்வியாண்டில், முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சோ்ந்த மாணவ, மாணவிகள் 100 பேரின், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சோ்க்கை ஆவணங்களில் உள்ள புகைப்படங்கள், ஆதாா் அட்டை, கையெழுத்து, முகவரி, அவா்கள் நீட்தோ்வில் பங்கேற்ற புகைப்பட அனுமதி அட்டை போன்றவற்றை ஒப்பிட்டுப் பாா்த்து ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்றன.

இப்பணிகள் புதன்கிழமை நிறைவு பெற்றதும், சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்துக்கு ஆய்வு விவரம் குறித்த தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று, மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com