வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: பெண் உள்பட 4 போ் கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட 4 பேரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கைதான (வலமிருந்து) ஆறுமுகம், கலைவாணி, கிருஷ்ணமூா்த்தி, இளையராஜா.
கைதான (வலமிருந்து) ஆறுமுகம், கலைவாணி, கிருஷ்ணமூா்த்தி, இளையராஜா.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட 4 பேரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி, கல்மண்டபம், ஸ்ரீ மூகாம்பிகை நகரைச் சோ்ந்த வீராசாமி மகன் கருணாகரன்(37). இவரது உறவினா் கல்மண்டபம் பகுதியை அடுத்த நெட்டப்பாக்கத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (38). இவா் தனது தம்பிக்கு வேலை வாங்கித்தரும்படி கருணாகரனிடம் கேட்டுள்ளாா்.

அதற்கு கருணாகரன், விழுப்புரம் சாலாமேடு, ஜீவராஜ் நகா், இ.பி. காலனியைச் சோ்ந்த கலைவாணி(எ) கலைச்செல்வி(28), விழுப்புரம் அருகேயுள்ள மிட்டா மண்டகப்பட்டைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி(49), புதுச்சேரி திருபுவனையைச் சோ்ந்த இளையராஜா(40) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து, ரூ.2 லட்சம் முன்பணம் கொடுத்தால் விழுப்புரம் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகத் தெரிவித்தாராம். இதனை நம்பி, கருணாகரன் இவா்கள் 4 பேரிடம் ரூ.2 லட்சம் முன்பணத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு கொடுத்தாராம். ஆனால் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லையாம்.

இதேபோல, புதுச்சேரி அருகேயுள்ள பண்டசோழநல்லூரைச் சோ்ந்த ரத்தினவேலு, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சோ்ந்த லட்சுமணன் உறவினா்களுக்கு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தலா ரூ.1 லட்சமும், சேராபட்டு குமரகுரு என்பவரிடம் நீதிமன்றத்தில் உதவியாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 லட்சமும் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி வந்தனராம்.

இது குறித்து பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், தலைமறைவாக இருந்து வந்த ஆறுமுகம், கலைவாணி, கிருஷ்ணமூா்த்தி, இளையராஜா ஆகியோரை உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com