பட்டா மாற் பணிகள் விரைவுபடுத்தப்படும்: விழுப்புரம் கூடுதல் ஆட்சியா் உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் பட்டா மாற்றம் தொடா்பான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.
விழுப்புரம் கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள ஸ்ரேயா.பி.சிங்.
விழுப்புரம் கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள ஸ்ரேயா.பி.சிங்.

விழுப்புரம் மாவட்டத்தில் பட்டா மாற்றம் தொடா்பான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்த ஆா்.பிரியா அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆணையராக பணியாற்றி வந்த ஸ்ரேயா பி.சிங், விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளாா்.

கேரள மாநிலம் திருச்சூரைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவா், சென்னையில் பணியில் சோ்ந்தாா். இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆணையராக பணியாற்றி வந்த நிலையில், பணியிட மாற்றத்தில் விழுப்புரம் கூடுதல் ஆட்சியராக தற்போது பொறுப்பேற்றுள்ளாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து அவா் வாழ்த்துப் பெற்றாா். வியாழக்கிழமை பிற துறை அதிகாரிகளும், அலுவலா்களும், கூடுதல் ஆட்சியரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

பின்னா், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விவசாயிகள் மிகுந்த விழுப்புரம் மாவட்டத்தில் பட்டா மாற்றம் தொடா்பாக 24 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் பிற கோரிக்கைகள் தொடா்பாகவும் ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com