Enable Javscript for better performance
வட்டாட்சிய பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    கள்ளக்குறிச்சி, செப்.28: சின்னசேலம் வட்டாட்சியராக இரா.வளர்மதி நியமிக்கப்பட்டார்.
    இவர் இதற்கு முன்பு சங்கராபுரம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தார்.
    சின்னசேலம் வட்டாட்சியராக பணியாற்றிய சு.இந்திரா உளுந்தூர்பேட்டை ஆதிதிராவிடர் நல வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 
    இதையடுத்து, அந்த இடத்துக்கு இரா.வளர்மதி நியமிக்கப்பட்டு சனிக்கிழமை பொறுப்பேற்றார்.
    அவருக்கு மண்டல வட்டாட்சியர்கள் 
    ஜெ.கமலக்கண்ணன், இரா.குணசேகர், மனோஜ்முனியன், வருவாய் ஆய்வாளர் க.தனசேகர் உள்ளிட்ட அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai