திருக்கோவிலூரில் தமிழ்ச் சங்க ஆண்டு விழா

திருக்கோவலூர் தமிழ்ச் சங்கத்தின் 87-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.


திருக்கோவலூர் தமிழ்ச் சங்கத்தின் 87-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
திருக்கோவிலூரில் நடைபெற்ற விழாவுக்கு, தமிழ் சங்கத் தலைவர் சிங்கார.உதியன் தலைமை வகித்தார். தொல்லியல் துறை காப்பாட்சியர் அ.ரஷீத்கான், துணைத் தலைவர் பா.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் பாரதி மணாளன் வரவேற்றார். நல்லாசிரியர் வெ.ராமலிங்கம் குறள் விளக்கம் அளித்தார்.
பொருளாளர் புலவர் சி.குருராசன் தொடக்க உரையாற்றினார். கபிலர் படத்தை புலவர் கோவிந்தராஜனும், அதிமதுரக்கவிராயர் படத்தை திண்டிவனம் தமிழ்ச் சங்கத் தலைவர் துரை.ராசமாணிக்கமும், தமிழ்ச் சங்க நிறுவுனர் ஞானியாரடிகள் படத்தை கல்வியாளர் தே.முருகனும், கோவலடிகள் ம.ரா.குமாரசாமியார் படத்தை தலைமையாசிரியர் மொ.ராசேந்திரனும் திறந்து வைத்தனர். 
பள்ளி, கல்லூரி மாணவர்களின் பேச்சரங்கம் நடை பெற்றது. தமிழிசைப் பாடல்களை புலவர் கோவிந்தசாமியும், தமிழாசிரியர் செ.முருகனும் பாடினர்.
திருக்கோவலூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ வீரசைவத்திரு 9-ஆம் பட்டம் ஞானியார் சுவாமிகள், தமிழ்ச் சங்கத்தின் 87-ஆவது ஆண்டு இலச்சினையை வெளியிட்டுப் பேசினார். பாவேந்தர் பேரவை நிறுவுனர் உலகதுரை, தமிழ்ச் சங்க சிறப்புத் தலைவர் பெண்ணை வளவன், குருஜி மிஷன் நிறுவுனர் ராமானந்தகுரு, கிறித்துவத் தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் அருள்நாதன் தங்கராசு, சங்கராபுரம் வள்ளலார் மன்றம் இராம.முத்துக்கருப்பன், மதி அகாதெமி நிர்வாகி ப.மதிவாணன், மைசூரு தமிழ்ச் சங்கத் தலைவர் கு.புகழேந்தி ஆகியோருக்கு ஞானியாரடிகள் விருதும், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 40 தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகளுக்குப் பாராட்டுப் பட்டயமும் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com