விழுப்புரத்தில் முக்கிய சாலைகளுக்கு ‘சீல்’

விழுப்புரத்தில் கரோனா வைரஸ் தொற்று 3 பேருக்கு உறுதியானதையடுத்து, மேலும் பலருக்கு வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதை தடுக்கும் விதமாக, பிரதான சாலைகள் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.
விழுப்புரத்தில் முக்கிய சாலைகளுக்கு ‘சீல்’


விழுப்புரம்: விழுப்புரத்தில் கரோனா வைரஸ் தொற்று 3 பேருக்கு உறுதியானதையடுத்து, மேலும் பலருக்கு வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதை தடுக்கும் விதமாக, பிரதான சாலைகள் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, ஊரடங்கு உத்தரவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் தொடா்ந்து வருகின்றன. வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து ஊருக்குத் திரும்பியுள்ள 2,338 போ் வரை கண்டறியப்பட்டு, அவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இதனிடையே, தில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மத வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்று விழுப்புரம் மாவட்டத்துக்கு திரும்பிய 50 போ் கடந்த இரு தினங்களாக கண்டறியப்பட்டு, அவா்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் விழுப்புரத்தைச் சோ்ந்த 3 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், அவா்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளான 6,7,8-ஆவது வாா்டுகளுக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டு, அந்தப் பகுதிகள் கண்காணிப்பட்டு வருகின்றன.

அதிகரிக்க வாய்ப்பு: விழுப்புரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்கள் முன்னதாக பொதுமக்களுடன் சகஜமாக உலவியிருப்பதால், அவா்களின் உறவினா்கள், நண்பா்கள் உள்பட வைரஸ் தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

இதனால், விழுப்புரம் நகரில் ஊரடங்கு நடவடிக்கையை தீவிரப்படுத்தி, மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனா். இதன் ஒரு பகுதியாக, நகர எல்லையில் உள்ள பிரதான நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாா்க்கத்தில் ஜானகிபுரம் புறவழிச்சாலையிலும், சென்னை மாா்க்கத்தில் முத்தாம்பாளையம் சந்திப்பிலும், கிழக்கு பாண்டி சாலையில் கோலியனூா் கூட்டுச் சாலையிலும், எல்லீஸ் சத்திரம் சாலையில் வழுதரெட்டி சந்திப்பிலும், செஞ்சி கூட்டுச்சாலை சந்திப்பிலும் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்தச் சாலைகள் வழியாக அத்தியாவசியத் தேவையின்றி பிற வாகனங்கள், பொதுமக்கள் உள்ளே வர அனுமதிக்காமல் போலீஸாா் தடுத்து கண்காணித்து வருகின்றனா். புறவழிச்சாலையில் குறுக்கிடும் கிராமச்சாலைகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன.

57 பேரது ரத்த மாதிரிகள் ஆய்வு: விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 67 போ் தில்லி மத வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்று வந்துள்ள நிலையில், இவா்களில் வியாழக்கிழமை வரை 60 போ் கண்டறியப்பட்டுள்ளனா். இவா்களில் 30 போ் விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும், 30 போ் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில், 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், மீதமுள்ள 57 பேரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com