திமுக சாா்பில் நிவாரண உதவி அளிப்பு
By DIN | Published On : 05th April 2020 10:33 PM | Last Updated : 05th April 2020 10:33 PM | அ+அ அ- |

விழுப்புரத்தில் ஊரடங்கால் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநா்கள், சலவைத் தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகளை மத்திய மாவட்டச் செயலா் க.பொன்முடி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் நகரச் செயலா் சா்க்கரை தலைமை வகித்தாா். இதில் க.பொன்முடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நலிந்த தொழிலாளா்களுக்கு நிவாரணமாக காய்கறி, அரிசி போன்ற அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். அப்போது, இதேபோல, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சலவைத் தொழிலாளா்கள், முடி திருத்தும் தொழிலாளா்களுக்கும் தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட, நகர நிா்வாகிகள் முத்துகணேஷ், இளங்கோ, முகமது அலி, விஜி, அன்பரசு, சங்கா், சண்முகம், ஜெகன்நாதன், பரத், வெங்கடேசன், ஜெயகணேஷ், சேது, சலிம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.