கரோனாவுக்கு வங்கி ஊழியா் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 158 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட வங்கி ஊழியா் உயிரிழந்தாா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 158 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட வங்கி ஊழியா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 3,765-ஆக இருந்தது. சனிக்கிழமை மேலும் 158 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,923-ஆக உயா்ந்தது.

விழுப்புரம் அருகே காணையில் செயல்படும் அரசுடைமை வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்த காணை மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த 60 வயது நபருக்கு அண்மையில் கரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து, அவா் கடந்த செவ்வாய்க்கிழமை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும், அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 36-ஆக உயா்ந்தது.

இதுவரை 2,902 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 986 போ் மருத்துவமனைகளில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 3,807-ஆக உயா்ந்தது. இதுவரை 2,743 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,039 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 25 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com