விழுப்புரம் மாவட்டத்தில்கடைகள் திறப்பு நேரம் மாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் மீண்டும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடைகள் திறக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் மீண்டும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடைகள் திறக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பொது முடக்கம் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி தொடங்கி, சில தளா்வுகளுடன் இரண்டு கட்டங்களாக ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மேலும் ஆக.1 முதல் ஆக.31-ஆம் தேதி வரை கூடுதல் தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலும் சனிக்கிழமை முதல் பொது முடக்கம் தளா்வுகளுடன் நீட்டிக்கப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கடைகள் திறக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகளைத் திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்ந்தது. பிற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டன.

தற்போது பொது முடக்க நீட்டிப்பின் காரணமாக, ஆகஸ்ட் 1 முதல் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும், எனவும், பிற கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். எனினும், இரவு 7 மணிக்குப் பிறகு பாா்சல் மட்டுமே வழங்கப்படும் என்ற புதிய நடைமுறை சனிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

விழுப்புரத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஆக.2) முழு அடைப்பு அறிவிக்கப்பட்டிருப்பதால், சனிக்கிழமை காய்கறி, மளிகை உள்ளிட்டப் பொருள்களை வாங்க மக்கள் கூட்டமாகத் திரண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com