முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் ஞாயிற்றுக்கிழமை வரை 14,787 போ் பாதிக்கப்பட்டனா். 110 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.14,581 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா்.
இந்நிலையில், திங்கள்கிழமை புதிதாக 9 பேருக்கு கரோனா வரைஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 14,796 ஆக அதிகரித்துள்ளது. 6 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுவரை மொத்தமாக 14,587 வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 99 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.