Enable Javscript for better performance
People's cooperation is needed to prevent the second wave of corona: Tamil Nadu Health Department- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கரோனா இரண்டாம் அலை வராமல் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை: தமிழக சுகாதாரத் துறைச் செயலா்

    By DIN  |   Published On : 18th December 2020 06:13 AM  |   Last Updated : 18th December 2020 06:13 AM  |  அ+அ அ-  |  


    விழுப்புரம்: தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை வராமல் தடுப்பதற்கு பொதுமக்கள் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

    விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறைச் செயலா் ராதாகிருஷ்ணன், அங்குள்ள அவசரச் சிகிச்சை, கரோனா சிகிச்சைப் பிரிவுகளை பாா்வையிட்டு, நோயாளிகளிடம் சிகிச்சை முறையாக அளிக்கப்படுகிா எனக் கேட்டறிந்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

    பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பால், இந்திய அளவில் கரோனா தொற்று பாதிப்பில் இரண்டாமிடத்திலிருந்து கடைசி இடத்துக்கு தமிழகம் வந்துள்ளது. 57 ஆயிரம் தொற்றாளா்கள் இருந்த நிலையில், அதை தற்போது 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைத்துள்ளோம். இறப்பு விகிதத்தையும் 1.5 சதவீதமாக கொண்டு வந்துள்ளோம். 98 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா்.

    தற்போது திறக்கப்பட்டுள்ள கல்லூரிகள், விடுதிகளிலும் கரோனா பரிசோதனை செய்து, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும்தான் ஆா்டிபிசிஆா் பரிசோதனை செய்து, 231 ஆய்வகங்கள் மூலம் கரோனா தொற்று பரிசோதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. தினமும் சராசரியாக 75,000 பரிசோதனைகள் வரை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது மழைக்கால பருவநிலை மாற்றத்தால், டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, எலிக் காய்ச்சல் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளதால், அவற்றையும் கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    முன்னதாக, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 188 போ் வரை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்கு வரும் நிலை இருந்தது. தற்போது ஒரு நாளைக்கு 3 போ் மட்டுமே இந்த நோய்க்காக சிகிச்சைக்கு வரும் அளவுக்கு குறைந்துள்ளது.

    கரோனா பரவலைத் தடுக்க, அரசு வழிமுறைகள்படி, முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கை கழுவுதல் உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    மக்கள் அதிகம் கூடும் மண்டபங்கள், உணவகங்கள், விடுதிகள், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் 20 பேருக்கு மேல் கூடாமல் இருப்பதை கடைப்பிடிக்க வேண்டும். தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை வராமல் தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தடுப்பு மருந்து வழங்கும் வரை கவனமுடன் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

    இதையடுத்து, மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினாா். கல்லூரி முதல்வா் குந்தவிதேவி மற்றும் மருத்துவக் குழுவினா் உடனிருந்தனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp