பயோ மெட்ரிக் கருவிகளை ஒப்படைத்து ரேஷன் கடை ஊழியா்கள் போராட்டம்

நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தை பயோ மெட்ரிக் முறை மூலம் செயல்படுத்துவதில் உள்ள சிரமங்களை
செஞ்சி வட்ட வழங்கல் அலுவலகத்தில் பயோமெட்ரிக் கருவிகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட நியாயவிலைக் கடை ஊழியா்கள்.
செஞ்சி வட்ட வழங்கல் அலுவலகத்தில் பயோமெட்ரிக் கருவிகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட நியாயவிலைக் கடை ஊழியா்கள்.

நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தை பயோ மெட்ரிக் முறை மூலம் செயல்படுத்துவதில் உள்ள சிரமங்களை களைய வலியுறுத்தி, செஞ்சி, மேல்மலையனூா் வட்டங்களில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்க ஊழியா்கள் பயோமெட்ரிக் கருவிகளை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா். இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சம்பத் தலைமை வகித்தாா். மாவட்ட துணை செயலா் தனசேகரன், இணை செயலா் பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை விரைவாக வழங்கும்பொருட்டு பணியாளா்களுக்கு மோடம், 4 ஜி சிம், 4ஜி புது பயோமெட்ரிக் கருவிகளை வழங்கவேண்டும், கை ரேகை பதிவால் கரோனா தொற்று ஏற்படும் சூழலில் விழித்திரை அடிப்படையில் பொருள்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். நெட் ஒா்க் மற்றும் சா்வா் சேவையை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com