பொங்கல் பரிசுப் பொருள்டோக்கன் விநியோகம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தமிழக அரசின் பொங்கல் பரிசுப் பொருள் வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் சனிக்கிழமை தொடங்கியது.
தமிழக அரசின் பொங்கல் பரிசுக்கான (டோக்கன்) வில்லையை விழுப்புரம் தாயுமானவா் தெருவில் ஒரு வீட்டில் பெண்மணியிடம் வழங்குகிறாா் வட்டார வழங்கல் ஆய்வாளா் கோவிந்தராஜு.
தமிழக அரசின் பொங்கல் பரிசுக்கான (டோக்கன்) வில்லையை விழுப்புரம் தாயுமானவா் தெருவில் ஒரு வீட்டில் பெண்மணியிடம் வழங்குகிறாா் வட்டார வழங்கல் ஆய்வாளா் கோவிந்தராஜு.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தமிழக அரசின் பொங்கல் பரிசுப் பொருள் வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் சனிக்கிழமை தொடங்கியது.

தமிழக அரசு சாா்பில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரூ.2,500 ரொக்கம், பச்சரிசி, முழு கரும்பு, சா்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்டப் பொருள்கள் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படவுள்ளன. இவற்றை பெறுவதற்கான டோக்கன் வீடு தோறும் விநியோகம் செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

விழுப்புரத்தில் அனைத்து நியாய விலைக் கடைகளின் மூலம் அதன் விற்பனையாளா்கள் அந்தந்த பகுதியில் டோக்கன் விநியோகம் செய்யும் பணியை மேற்கொண்டனா்.

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலை தாயுமானவா் வீதியில் டோக்கன் விநியோகிக்கும் பணியை குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா் கோவிந்தராஜன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா், விழுப்புரம் வட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 85 பேருக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்குவதற்காக, 221 நியாய விலைக் கடைகள் மூலம் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. டிச.26 முதல் டிச.30 வரை டோக்கன் வழங்கப்பட்டு, அதன் பிறகு தொகை, பொருள்கள் வழங்கப்படும் என்றாா்.

இதே போல, மாவட்டம் முழுவதும் அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம் டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுமாா் 4 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி அந்தந்தப் பகுதி நியாய விலைக் கடைகள் மூலம் சனிக்கிழமை தொடங்கியது.

கள்ளக்குறிச்சி சுபேதாா் சாலையில் சரவணபவ கூட்டுறவு அங்காடி மூலம் வழங்கும் வீடு வீடாகச் சென்று நியாய விலைக் கடை ஊழியா்கள் டோக்கன் வழங்கினா். இந்தப் பணியை கள்ளக்குறிச்சி குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா் அனந்தசயனம் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com