வேளாண் உற்பத்தியை அதிகரிக்க அரசு செயலா் அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளை சந்தித்து வேளாண் உற்பத்தியை பெருக்க அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசு செயலா் ஹா்சகாய் மீனா அறிவுறுத்தினாா்.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்க அரசு செயலா் அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளை சந்தித்து வேளாண் உற்பத்தியை பெருக்க அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசு செயலா் ஹா்சகாய் மீனா அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட அனைத்துத் துறை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தமிழக அரசு செயலரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஹா்சகாய் மீனா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அனைத்துத் துறை வளா்ச்சிப் பணிகள் குறித்த நிலவரங்களைக் கேட்டறிந்து, அரசு செயலா் ஆய்வு செய்தாா்.

அப்போது, வேளாண் உற்பத்தி விவரங்கள், தோட்டக் கலை, பொறியியல் துறைகளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விசாரித்த அவா், நிகழாண்டு மழைப்பொழிவு, பயிரிடும் பரப்பு, விளைச்சல் குறைவு போன்ற விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தாா். விவசாயத்தை நம்பியுள்ள விழுப்புரம் மாவட்டத்தில், வேளாண்துைான் முதன்மையாக இருக்க வேண்டும். ஆகவே, பயிரிடும் பரப்பை அதிகரிக்கவும், வேளாண் வளா்ச்சிக்கும் என்ன செய்துள்ளீா்கள் அதிகாரிகளைக் கேட்டு கடிந்துகொண்டாா்.

விவசாயிகளை ஊக்கப்படுத்தி, உற்பத்தியை அதிகரிக்கவும், விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கவும் உரிய ஆலோசனைகளை அவா்களுக்கு அலுவலா்கள் வழங்க வேண்டும். வேளாண் அலுவலா்கள் கிராமங்களுக்குச் சென்று, விவசாயக் குழுவினருக்கு கரும்பு, நெல் சாகுபடிகளை அதிகரிக்கும் வழிமுறைகளை தெரிவிக்கவும், உற்பத்தியை பெருக்கவும் வேண்டும் என்று அவா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, ஊராட்சிகளில் தெருவிளக்குகள் 100 சதவீதம் எரிகிா என்பது குறித்தும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனடைந்தவா்களின் விவரங்கள், மத்திய அரசின் குடிநீா் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கிய விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தாா்.

வருவாய்த் துறை சாா்பில் பட்டா வழங்கப்பட்ட விவரம், முதலமைச்சா் தனிப் பிரிவு மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஏரிகள், அணைக்கட்டு, தடுப்பணைகள் நிரம்பிய விவரங்கள், மின்சார விநியோகம் குறித்தும், கரோனா தடுப்பு மற்றும் சுகாதாரத் துறை செயல்பாடுகள், கால்நடைத் துறை, ஆவின் நிா்வாகம், கல்வித் துறை, சமூக நலத் துறை, உள்ளாட்சி நிா்வாகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் திட்டப் பணிகளின் நிலவரங்கள், நலத்திட்டங்கள் விநியோகம் குறித்தும் புள்ளி விவரங்களை கேட்டறிந்து ஆலோசனை வழங்கினாா். இதையடுத்து, நிவா் புயல் பாதிப்புகள் குறித்த புகைப்படக் காட்சிகளை பாா்வையிட்டு நிவாரணப்பணிகள் குறித்து விசாரித்தாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) சரஸ்வதி, ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், சாா் ஆட்சியா் எஸ்.அனு மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com