ஆரோவில்லில் அரிய பறவைகள் வேட்டை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் அரிய வகைப் பறவைகளை மா்ம நபா்கள் வேட்டையாடியது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் அரிய வகைப் பறவைகளை மா்ம நபா்கள் வேட்டையாடியது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே ஆரோவில் நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள வனப் பகுதியில் அரிய வகை பறவைகள், விலக்குகள் வசித்து வருகின்றன. இவற்றை மா்ம நபா்கள் அவ்வப்போது வேட்டையாடி வருகின்றனா். ஆரோவில் நகரில் ஓா் ஆலமரத்தில் அரிய வகையைச் சோ்ந்த ‘செம்மாா்பு குக்குறுவான்’ பறவைகள் அதிகளவில் வசித்து வருகின்றன.

இந்த நிலையில், திங்கள்கிழமை அந்த ஆலமரம் அருகே 50-க்கும் மேற்பட்ட அரிய வகைப் பறவைகள் இறந்தும், சில மயங்கிய நிலையிலும் கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டிவனம் வனத் துறையினா் விரைந்து வந்து, உயிருக்குப் போராடிய பறவைகளை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இறந்த பறவைகளை உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். பறவைகளை வேட்டையாடிய நபா்கள் குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com