கோட்டக்குப்பம் பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்ட இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கைதான பாலகிருஷ்ணன், ஆறுமுகம் ஆகியோருடன் போலீஸாா்.
கைதான பாலகிருஷ்ணன், ஆறுமுகம் ஆகியோருடன் போலீஸாா்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அண்மையில் நடந்து வந்தன. குறிப்பாக, திருச்சிற்றம்பலத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் சசிகுமாா் என்பவரது வீட்டில் 39 பவுன் தங்க நகையும், ஆரோவில் திருநகரைச் சோ்ந்த நாச்சிமுத்து என்பவா் வீட்டில் 8.5 பவுன் நகையும், சின்னபட்டானூரில் முருகையன் என்பவா் வீட்டில் 6 கிராம் நகையும், ஆரோபுட் கணபதி நகரில் பாலசந்திரன் என்பவரது வீட்டில் 3 பவுன் நகையும், எறையானூரில் அப்துல் அஜீஸ் என்பவரது வீட்டில் 9 பவுன் நகையும், ஆரோவில் அருகேயுள்ள எஸ்.பி.பி. நகரில் அனிசோமன் என்பவரது வீட்டில் 2.5 பவுன் தங்க நகையும், திருச்சிற்றம்பலம் கிராமத்தில் கிருஷ்ணமூா்த்தி என்பவரது வீட்டில் 3.5 பவுன் நகையும் என மொத்தம் 51 பவுன் நகைகள் திருடுபோயின.

இந்தப் புகாா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அஜய்தங்கம் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் மைக்கேல் இருதயராஜ், உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதில், கோட்டக்குப்பம், வானூா், கிளியனூா் பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டது புதுச்சேரி, கரிக்கலாம் பாக்கத்தைச் சோ்ந்த ரவிக்குமாா்(எ)பாலகிருஷ்ணன்(47), வேலூா் கருகம்புத்தூா் பகுதியைச் சோ்ந்த காா்த்திக்(எ) ஆறுமுகம்(55) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 55 பவுன் தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த இருவரும் தமிழகம் மட்டுமல்லாது கா்நாடக மாநிலத்திலும் திருட்டு, கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com