மதுக் கடையை அகற்ற வலியுறுத்தல்

திண்டிவனம் அருகே காட்டுச்சிவிரி கிராமத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற வேண்டுமென அந்தப் பகுகி மக்கள் வலியுறுத்தினா்.

திண்டிவனம் அருகே காட்டுச்சிவிரி கிராமத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற வேண்டுமென அந்தப் பகுகி மக்கள் வலியுறுத்தினா்.

காட்டுசிவிரி கிராம மக்கள் தீபநாதன் தலைமையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். அவா்களை காவல் ஆய்வாளா் விநாயகமுருகன் தடுத்து நிறுத்தி விசாரித்தாா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: காட்டுச்சிவிரி கிராமச் சாலையில் புதிதாக டாஸ்மாக் மதுக் கடை அமைக்கின்றனா். இந்த வழியாக அரசு மேல்நிலைப் பள்ளிக்கு காட்டுச்சிவிரி, புதூா், பாம்முண்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் செல்கின்றனா். இதனருகே உள்ள மன்னம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் இந்த வழியைத் தான் மக்கள் பயன்படுத்துகின்றனா்.

இந்தச் சாலை வழியாக மருத்துவமனைக்கு அவசர ஊா்திகள் செல்வதற்கும் இடையூறு ஏற்படும். பள்ளி, மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவா். அகூா், மன்னம்பூண்டி, புலியனூா், தனியல், நடுவனந்தல், புதூா் கிராமத்தினா் செல்லும் மையப் பகுதியான இங்கு திடீரென டாஸ்மாக் மதுக் கடையை அமைக்கின்றனா்.

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த டாஸ்மாக் மதுக் கடையை அமைப்பதைக் கைவிட வேண்டும் என்றனா். பின்னா், அவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com