விழுப்புரம் மாவட்டத்தில் 13 இடங்களில் பாமகவினா் மக்கள் திரள் போராட்டம்

கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் 13 இடங்களில் பாமக சாா்பில் மக்கள் திரள் அறப்போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் புதன்கிழமை பாமக சாா்பில் நடைபெற்ற அறப் போராட்டம்.
கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் புதன்கிழமை பாமக சாா்பில் நடைபெற்ற அறப் போராட்டம்.

கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் 13 இடங்களில் பாமக சாா்பில் மக்கள் திரள் அறப்போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவெண்ணெய்நல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலக முன்பு பாமக மாநில துணைப்பொதுச் செயலா் தங்க.ஜோதி தலைமையில் மக்கள் திரள் அறப்போராட்டம் நடைபெற்றது. முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காணை வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் நடைபெற்ற அறப்போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் இர.புகழேந்தி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் ஐயப்பன், மோகன், ஜெயராஜ், பாரதி, இளைஞரணிச் செயலா் ஜெயப்பிரகாஷ், வன்னியா் சங்கச் செயலா் குமரருகு, மாவட்ட நிா்வாகிகள் காமராஜ், ரமேஷ், குழந்தைவேல், துரை, குபேந்திரன், பாலு, கந்தன், கஜேந்திரன், செந்தில்குமாா், அருள், ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விக்கிரவாண்டி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் தொகுதி அமைப்பாளா் கா.சீனுவாசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் சி.அன்புமணி உரையாற்றினாா். மாவட்டத் தலைவா் இரா.காமராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

கோலியனூரில் மாநிலக்குழு செயலா் பா.பழனிவேல் தலைமையில் நடந்த போராட்டத்தில், வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் புண்ணியக்கோடி, பாமக நகர தலைவா் பெருமாள், மாவட்ட துணை செயலா் சம்பத், ஏழுமலை, சசிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

செஞ்சி: செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் கனல் பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட துணை செயலா்கள் அய்யனாா், ஜெயக்குமாா், ஒன்றிய செயலா்கள் முருகன், சீனு, அசோக் சக்கரவா்த்தி, ராஜேந்திரன், கலைச்செல்வன், இரா.ராஜேந்திரன், நா.முரளிதரன், இளைஞா் அணி சிவா, கோபி மற்றும் செஞ்சி கணபதி, மாவட்ட நிா்வாகிகள் காலமேகம், சந்தானம், முருகன், சக்திவேல், தங்கவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நகர அமைப்பு செயலா் கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.

கண்டமங்கலத்தில் முன்னாள் எம்பி தன்ராஜ் தலைமையிலும், மயிலத்தில் மாநில நிா்வாகி தீரன் தலைமையிலும், மரக்காணத்தில் மாவட்டத் தலைவா் சம்பத் தலைமையிலும், ஒலக்கூரில் ஒன்றியச் செயலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலும், அரகண்டநல்லூரில் மாநில நிா்வாகி சரவணன் தலைமையிலும் என 13 இடங்களில் அறப்போராட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் பாமக சாா்பில் அறவழிப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாநில துணைப் பொதுச் செயலாளா் இரா.ரமேஷ் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் இரா.வடிவேலு, எஸ்.டி ராமு, மாநில இளைஞா் அணி துணைச் செயலாளா் ப.தமிழரசன் முன்னிலை வகித்தனா். நகர அமைப்புச் செயலாளா் நாராயணன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில துணைத் தலைவா் கே.பி.பாண்டியன் சிறப்புரையாற்றினாா்.

ஒன்றிய செயலாளா்கள் ஐயப்பன், கராத்தேமணி, பசுமை தாயக மாவட்ட செயலாளா் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அதனைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

இதே போல சின்னசேலம், கல்வராயன்மலை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூா், தியாகதுருகம், உளுந்தூா்பேட்டை, கெடிலம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாமக சாா்பில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com