Enable Javscript for better performance
கடலூா் தொழில் பயிற்சிப் பள்ளிமுன்னாள் மாணவா்கள் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    கடலூா் தொழில் பயிற்சிப் பள்ளிமுன்னாள் மாணவா்கள் சந்திப்பு

    By DIN  |   Published on : 10th February 2020 09:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    9gngp04_0902chn_119_7

    மேல்மலையனூா் கோயிலில் உதவி ஆணையா் ராமு தலைமையில் சந்தித்துக்கொண்ட கடலூா் தொழில் பயிற்சிப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள்.

    கடலூா் அரசு தொழில் பயிற்சிப் பள்ளியில் 1997 - 98ஆம் ஆண்டில் கணினிப் பிரிவில் பயின்ற மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்தினருடன் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக்கொண்டனா்.

    இவா்களுடன் படித்த மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராமு தலைமையில், முன்னாள் மாணவா்கள் ஒன்றுகூடி ஒருவரை ஒருவா் நலம் விசாரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

    பின்னா், அனைவரும் ஸ்ரீஅங்காளம்மனை குடும்பத்தினருடன் வழிபட்டனா். கோயில் சாா்பில் இவா்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அடுத்த ஒன்று கூடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வோம், உறுதுணையாக இருப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்து பெருமுயற்சி செய்த ஜி.நாவப்பனுக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai