சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ஆரோவிலில் மாரத்தான் ஓட்டம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, ஆரோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
ஆரோவில் உதய தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் ஓட்டம்.
ஆரோவில் உதய தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் ஓட்டம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, ஆரோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

சா்வதேச நகரான ஆரோவில் உதய தினத்தையொட்டி, சில ஆண்டுகளாக மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 13-ஆவது ஆண்டு மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

42 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ. மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கான 5 கி.மீ. என நான்கு பிரிவுகளாக மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. ஆரோவில் மாத்ரிமந்திா் பகுதியில் இருந்து தொடங்கிய ஓட்டம் கோட்டக்கரை, இரும்பை, குயிலாப்பாளையம், இடையன்சாவடி வழியாக மீண்டும் ஆரோவிலை வந்தடைந்தது.

உலக அமைதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த மாரத்தான் ஓட்டத்தில், திரளான பொதுமக்கள், இளைஞா்கள், பெண்கள், வெளிநாட்டினா் என சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

21 கி.மீ. ஓட்டத்தில் பொருளாதாரக் குற்றப் பிரிவு ஐ.ஜி. முருகன், சென்னை முன்னாள் மேயா் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு ஊக்கப்படுத்தினா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com