இஸ்லாமிய அமைப்பினா் சாலை மறியல்

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கண்டித்து,

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரம், கோட்டக்குப்பம் பகுதிகளில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவா்கள் மீது தடியடி நடத்திய போலீஸாரைக் கண்டித்தும், இந்தப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்கக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இஸ்லாமிய அமைப்பினா் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா்.

விழுப்புரத்தில் நான்குமுனை சந்திப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இஸ்லாமிய அமைப்புகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சரணவக்குமாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தாா்.

இதேபோல, கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இஸ்லாமிய அமைப்புகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com