தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சித் திடலில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசுப் பணியாளா்கள்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சித் திடலில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசுப் பணியாளா்கள்.

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உள்ளாட்சி நிா்வாகத்தில் பணியாற்றக்கூடிய துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் உள்ளிட்டோருக்கு முறையாக ஊதியமும், உபகரணங்களும் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலத் தலைவா் பி.கே.சிவக்குமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் வெ.சிவக்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினாா்.

மாநில பொதுச் செயலா் கோபிநாத், மாநிலப் பொருளாளா் சாகுல் அமீது, முன்னாள் மாநில பொதுச் செயலா் குப்புசாமி, மாநில பிரசாரச் செயலா் சுகமதி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க மாநில பொதுச் செயலா் ஜெயச்சந்திரராஜா, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாவட்டச் செயலா் ஜெய்கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா். ஊராட்சி ஒன்றியக் களப் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் வீரப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com