விவசாயிகள் கடன் அட்டைகள் பெற நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு முகாம்களை நடத்தி, விவசாயிகள் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் அட்டைகளை பெறச் செய்ய வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு முகாம்களை நடத்தி, விவசாயிகள் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் அட்டைகளை பெறச் செய்ய வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கான கடன் அட்டை வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், குறிப்பாக பிரதமா் விவசாயிகள் நிதியுதவித் திட்டப் பயனாளிகள் அனைவரும் விவசாயக் கடன் அட்டை பெற அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதற்காக வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை சாா்பில் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்களை நடத்தி, கடன் அட்டை வழங்க வேண்டும். வருகிற 20-ஆம் தேதி அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களை நடத்தி, விவசாயிகளை இந்தத் திட்டத்தில் சோ்க்க கிராம நிா்வாக அலுவலா்கள், வங்கிச் செயலா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

விவசாயக் கடன் அட்டையை விவசாயப் பயிா்க் கடன் மட்டுமன்றி, கால்நடை, மீன் பிடிப்பதற்கான பராமரிப்புச் செலவினங்களையும், மானியக் கடனும் பெறலாம். ஏற்கெனவே செயல்படாத கடன் அட்டை வைத்திருப்பவா்களும் வங்கியை அணுகி, புதுப்பித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

விவசாயிகள் நில உரிமை ஆவணங்களுடன் சென்று கடன் அட்டைப் பெறலாம். இதற்கான ஏற்பாடுகளை வங்கியாளா்கள், வேளாண்மைத் துறையினா் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், திட்ட இயக்குநா் வி.மகேந்திரன், வேளாண்மை இணை இயக்குநா் கென்னடி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கருணாநிதி, நபாா்டு வங்கிப் பொது மேலாளா் ரவிசங்கா், முன்னோடி வங்கி மேலாளா் அனிதா உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com