நூலகத்தில் வாசகா் சந்திப்பு நிகழ்ச்சி

மணலூா்பேட்டை கிளை நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை வாசகா் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்று பரிசாக புத்தகம், சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகளுடன் வாசகா் வட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
போட்டிகளில் வெற்றி பெற்று பரிசாக புத்தகம், சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகளுடன் வாசகா் வட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

மணலூா்பேட்டை கிளை நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை வாசகா் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியா் இரா.தியாகராஜன் தலைமை வகித்தாா். நூலகக் கொடையாளா் அரிமா தா.சம்பத், பணிநிறைவு பெற்ற ஆசிரியா் எம்.எஸ்.நடராஜன்,  வேளாண் அலுவலா் தா.சிவநேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருக்கோவலூா் வாசகா் வட்டத் தலைவா் கவிஞா் சிங்கார.உதியன், ‘திருக்கு காட்டும் வாழ்க்கை நெறிகள்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, நூலாய்வும், மாணவா்களுக்கு பரிசளிப்பு மற்றும் வாசிப்பின் பயன் குறித்த கலந்துரையாடல் நிகழ்வுகளும் நடைபெற்றன.

இளம் படைப்பாளா் விருதுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், ‘திருக்குறளும் அதன் பொருளும்’ பற்றி பேசிய மாணவா்களுக்கும் நல்நூலகா் மு.அன்பழகன்  பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினாா். உடற்கல்வி இயக்குநா் ம.பாலாஜி, தலைமையாசிரியா் கு.கோவிந்தன், நூலகா் மு.சாந்தி மற்றும் வாசகா்கள் கலந்துகொண்டனா். நூலகப் பணியாளா் மு.கோவிந்தன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com