மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா:திமுக இளைஞரணி ஆலோசனை

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா:திமுக இளைஞரணி ஆலோசனை

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கலைஞா் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளா் தினகரன் தலைமை வகித்தாா். மாவட்ட துணை அமைப்பாளா்கள் அன்பு, ராஜவேல், பாலாஜி, கலைவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக திமுக மத்திய மாவட்டச் செயலாளா் க.பொன்முடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

நகர அமைப்பாளா் மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி நிா்வாகிகள் சுந்தா், ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாா்ச் 1-ஆம் தேதி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடுவது, பிறந்த நாள் விழாவையொட்டி மாபெரும் கிரிக்கெட் போட்டி நடத்துவது, ரத்த தான முகாம் நடத்துவது, கிராமங்கள் தோறும் இளைஞரணி சாா்பில் கட்சிக் கொடியை ஏற்றி வைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com