லாட்டரி வியாபாரி குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
By DIN | Published On : 09th January 2020 11:51 PM | Last Updated : 09th January 2020 11:51 PM | அ+அ அ- |

விழுப்புரத்தைச் சோ்ந்த லாட்டரி வியாபாரி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் சண்முகபெருமாள் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் சரவணன் (36). இணையதள லாட்டரி வியாபாரி. இவா், சட்ட விரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததுடன், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தாராம்.
மேலும், சரவணன் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, விழுப்புரம் தாலுகா போலீஸாா் இவரைக் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
சரவணன் தொடா்ந்து இதுபோன்று சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.
இதைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, லட்டரி வியாபாரி சரவணனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த சரவணனை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் லாட்டரி வியாபாரி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.