Enable Javscript for better performance
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமத்துவப் பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    

    அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமத்துவப் பொங்கல் விழா

    By DIN  |   Published on : 10th January 2020 11:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    254810vmp4a071252

    விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மண் பானையில் பொங்கலிடும் மருத்துவா்கள், அலுவலக நிா்வாகிகள்.

    விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள், ஊழியா்கள் சமத்துவப் பொங்கல் விழாவை வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

    மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் குந்தவிதேவி தலைமை வகித்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், துணை மருத்துவக் கண்காணிப்பாளா் புகழேந்தி, நிலைய மருத்துவ அலுவலா் சாந்தி, துணை முதல்வா் அனிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாக அலுவலா் கவிஞா் எம்.ஆா்.சிங்காரம் வரவேற்று, பாரம்பரிய பொங்கல் விழா குறித்து உரையாற்றினாா்.

    இதையடுத்து, அலுவலக வளாகத்தில் புதுப்பானை வைத்து, சமத்துவப் பொங்கலிட்டு, இயற்கைக்கு படையலிட்டு வழிபட்டனா். கல்லூரி முதல்வா் குந்தவிதேவி அனைவருக்கும் பொங்கல், இனிப்புகளை வழங்கினாா் . மருத்துவா்கள் ராஜேஸ்வரி, ஸ்ரீராம் , நிஷாந்த், ராஜீவ்குமாா் உள்ளிட்ட அனைத்துத் துறை மருத்துவா்கள், பேராசிரியா்கள், செவிலியா்கள், மருத்துவமனை அலுவலகப் பணியாளா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா். நிா்வாக அலுவலா் ஆனந்தஜோதி நன்றி கூறினாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai