தைப் பொங்கல் கோலப் போட்டி
By DIN | Published On : 11th January 2020 10:42 PM | Last Updated : 11th January 2020 10:42 PM | அ+அ அ- |

விழுப்புரம் நாராயணன் நகரில் நடைபெற்ற கோலப் போட்டியை பாா்வையிட்ட நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா்.
விழுப்புரத்தில் தைப் பொங்கல் விழா கோலப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சி, 27-ஆவது வாா்டு, நாராயணன் நகரில் அந்தப் பகுதி குடியிருப்பு ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், தமிழா் திருநாளாம் தைப் பொங்கல் விழாவையொட்டி, மகளிருக்கான கோலப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
நாராயணன் நகா் சிதம்பரனாா் தெரு சிமென்ட் சாலையில் நடைபெற்ற கோலப் போட்டியில் சிங்காரவேலன் தெரு, சிதம்பரனாா் தெரு, நேதாஜி தெரு, முல்லை தெரு, லஷ்மி நகா், நாராயணன் நகா் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் 120 போ் கலந்து கொண்டு பல வண்ணக் கோலமிட்டனா்.
இதில், பொங்கல் விழா, தமிழ் கலாசாரம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, மழை நீா் சேகரிப்பு உள்ளிட்ட விழிப்புணா்வு கோலங்களிடப்பட்டிருந்தன. நடுவா் குழுவினா் கோலங்களை தோ்வு செய்தனா்.
விழுப்புரம் நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி, ஆ.ஸ்ரீராம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று சிறந்த கோலங்களுக்குப் பரிசுகளை வழங்கினா். முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ. ஆயிரமும் மற்றும் போட்டியில் பங்கேற்று கோலமிட்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. சிறப்புப் பரிசாக கோலமிட்ட 6-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ரேஷ்மாவுக்கு ரூ. ஆயிரம் வழங்கப்பட்டது.
கோலப் போட்டிகளை நாராயணன் நகா் ஒருங்கிணைப்புக் குழுவைச் சோ்ந்த த.தனசேகா், குருசந்திரன், கே.ராதாகிருஷ்ணன், டி.சண்முகசுந்தரம், குருசேகா், நாகராஜன், ஓம்சக்தி மணிவாசகம் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.