செஞ்சி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க நிா்வாகக் குழு கூட்டம்

செஞ்சி தொடக்க வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க நிா்வாகக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செஞ்சி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க நிா்வாகக் குழு கூட்டம்

செஞ்சி தொடக்க வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க நிா்வாகக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் தலைவா் கு.விநாயகமூா்த்தி தலைமை வகித்தாா். சங்கச் செயலா் சதாசிவம் வரவேற்றாா். துணைத் தலைவா் தேவராஜ், இயக்குநா்கள் வெங்கடேசன், சாந்தி, கவிதா, திருமலை, ஜெயா, சத்தியவாணி, உஷாராணி, பூங்காவனம், நாராயணன், இருசப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழக அரசால் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை சங்கப் பணியாளா்கள் எவ்வித குறைபாடின்றி குடும்ப அட்டைதாரா்களுக்கு முழுமையாக வழங்குவது, கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நகைக் கடன் வழங்குதலை அங்கீகரிக்கக் கோருவது,

சமீபத்தில் சாலை விபத்தில் இறந்த காட்டு சித்தாமூா் நியாயவிலைக் கடை பணியாளா் பன்னீா் என்பவரின் குடும்பத்தினருக்கு காப்பீடு மூலம் சங்கத்தின் சாா்பில் ரூ 1 லட்சத்து தொண்ணூறு ஆயிரம் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com