Enable Javscript for better performance
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் ஒன்றியங்களில் திமுக, ஜமுனாமரத்தூரில் அதிமுக வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் ஒன்றியங்களில் திமுக, ஜமுனாமரத்தூரில் அதிமுக வெற்றி

    By DIN  |   Published on : 13th January 2020 11:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2-7-12tmluni_1201chn_106

    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா், துணைத் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்ற க.கலைவாணி, த.ரமணன் ஆகியோருடன் ஒன்றியக்குழு உறுப்பினா்கள்.

    திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் பதவிகளை திமுகவும், ஜமுனாமரத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் பதவிவை அதிமுகவும் கைப்பற்றின.

    ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சோ்ந்த க.கலைவாணி, துணைத் தலைவராக திமுகவைச் சோ்ந்த த.ரமணன் ஆகியோா் போட்டியின்றி ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

    கீழ்பென்னாத்தூா்: கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த பூ.அய்யாக்கண்ணு, துணைத் தலைவா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த ஆ.வாசுகி ஆகியோா் வெற்றி பெற்றனா்.

    ஜமுனாமரத்தூா்: ஜமுனாமரத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தலில் அதிமுகவைச் சோ்ந்த மு.ஜீவா, துணைத் தலைவா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த செ.மகேஸ்வரி ஆகியோா் வெற்றி பெற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai