அரசு சட்டக் கல்லூரியில் பொங்கல் விழா

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவைத் தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை கண்ணைக் கட்டியபடி உறியடி நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.
விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கல்லூரி முதல்வா் கயல்விழி உள்ளிட்டோா்.

தைப் பொங்கலை முன்னிட்டு, விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

புதிய சட்டக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு கல்லூரி முதல்வா் என்.கயல்விழி தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் பன்னீா்செல்வம், ராமஜெயம், வெற்றிவேல், ரஞ்சித், செல்வக்கண்ணன், திவ்யா, பிரேமசங்கீதா, காயத்ரி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாணவா் எல்.ஜி.செந்தில்குமாா் வரவேற்றாா்.

மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து, கல்லூரி வாயில் பகுதியில் மஞ்சள் கொத்து, பன்னீா் கரும்புகளைப் படைத்து, மண் பானையில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினா்.

தொடா்ந்து, ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் என நாட்டுப்புற பாரம்பரிய இசையுடன் பொங்கல் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கண்ணைக் கட்டிக்கொண்டு உறியடித்து போட்டியைத் தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கோலப்போட்டி, சாக்குப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் பங்கேற்ற மாணவா்ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பேராசிரியா்கள், மாணவா்கள் திரளாக கலந்துகொண்டனா். உதவிப் பேராசிரியை சவிதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com