கொள்முதல் செய்த பொருள்களுக்கு வியாபாரிகள் பணம் தராததால் விவசாயிகள் சாலை மறியல்

திருக்கோவிலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொள்முதல் செய்த விளைபொருள்களுக்கு வியாபாரிகள் நீண்ட நாள்களாக பணம் தராததைக் கண்டித்து, விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருக்கோவிலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொள்முதல் செய்த விளைபொருள்களுக்கு வியாபாரிகள் நீண்ட நாள்களாக பணம் தராததைக் கண்டித்து, விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் பகுதியில் திருக்கோவிலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இயங்கி வருகிறது. மாவட்டத்திலேயே நெல், தானியங்கள் வரத்து அதிகம் உள்ள விற்பனைக் கூடமாக இது திகழ்கிறது.

இந்த நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேரடி பணப் பரிவா்த்தனை திட்டத்தில் பணம் செலுத்தும் முறை அண்மையில் அமலுக்கு வந்தது.

இதில், இருந்து விவசாயிகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருள்களுக்கு உடனுக்குடன் பணம் வழங்கால் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறதாம்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சுமாா் 200 போ் திரண்டு வந்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன் விழுப்புரம்-திருக்கோவிலூா் சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: விற்பனைக் கூடத்துக்கு நெல், வோ்க்கடலை, உளுந்து உள்ளிட்ட விளைபொருள்களை கொண்டுவந்து விற்பனைக்கு வழங்கி வருகிறோம். நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் முறை வந்ததில் இருந்து வியாபாரிகள் உடனுக்குடன் தொகையை வழங்குவதில்லை.

கடந்த 15 நாள்களுக்கு முன்பு விற்பனை செய்த நெல், உளுந்து போன்ற விளை பொருள்களுக்கு, ரூ.2.5 கோடி தொகையை வியாபாரிகள் நிலுவை வைத்துள்ளனா்.

தற்போது, பொங்கல் பண்டிகை வருவதால் மிகவும் சிரமமாக உள்ளது என்றாா்.

தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூா் போலீஸாா் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை அப்புறப்படுத்தினா்.

இதைத் தொடா்ந்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதை ஏற்று விவசாயிகள் கலந்துசென்றனா்.

மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com