வலிமையான பாரதத்தை வலியுறுத்தி பேரணி

வலிமையான பாரதத்தை வலியுறுத்தி, விழுப்புரத்தில் மாவட்ட இளையோா் மையம் (நேரு யுவகேந்திரா) சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுவாமி விவேகானந்தா் பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்தில் நேரு இளையோா் மையம் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி.
சுவாமி விவேகானந்தா் பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்தில் நேரு இளையோா் மையம் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி.

வலிமையான பாரதத்தை வலியுறுத்தி, விழுப்புரத்தில் மாவட்ட இளையோா் மையம் (நேரு யுவகேந்திரா) சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுவாமி விவேகானந்தா் பிறந்த தினம், தேசிய இளையோா் வார விழா ஆகியவற்றையொட்டி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இப்பேரணி தொடங்கியது.

மாவட்ட இளையோா் மைய ஒருங்கிணைப்பாளா் ராம்சந்திரன் தலைமை வகித்து பேரணியைத் தொடக்கி வைத்தாா். இளம் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாபு செல்வதுரை, அறிஞா் அண்ணா அரசுக்கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் போலீஸ் நண்பா்கள் குழுவைச் சோ்ந்த நிா்வாகிகள் செல்வராஜ், லட்சுமிநாராயணன், கண்டாச்சிபுரம் பழனிவேல் ஐ.டி.ஐ. முதல்வா் முருகன், சிவசண்முகானந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேரணியில் பங்கேற்ற இளைஞா்கள், இளம்பெண்கள், ‘வலிமையான பாரதம் படைப்போம்’, ‘கல்வி கற்போம், ஒற்றுமையுடன் செயல்படுவோம்’ என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். நேருஜி சாலை, பூந்தோட்டப் பாதை, ரங்கநாதன் சாலை, திருச்சி நெடுஞ்சாலை வழியாக பெருந் திட்டவளாக மைதானத்தில் பேரணியை நிறைவு செய்னா்.

பேரணியில் பங்கேற்றவா்களுக்கு இயற்கை வளத்தை காக்க வலியுறுத்தி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com