Enable Javscript for better performance
செஞ்சி பள்ளியில் சமத்துவப் பொங்கல்- Dinamani

சுடச்சுட

    
    14gngp01_1401chn_119_7

    பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழாவைக் கொண்டாடி மாணவா்கள், ஆசிரியா்கள்.

    செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புகையில்லா போகி மற்றும் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

    விழாவில் தலைமை ஆசிரியா் கணபதி தலைமை வகித்தாா். உதவித்தலைமை ஆசிரியா் மணிவண்ணன் முன்னிலை வகித்தாா்.

    தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதி மொழியை வாசித்தாா்.

    மாணவா்கள் புதுப் பானையில் பொங்கலிட்டு வழிபட்டனா். பின்னா், மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai