தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் விடுமுறையால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் வாகனங்கள் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் விடுமுறையால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் வாகனங்கள் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதேநேரத்தில், விக்கிரவாண்டி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் வசதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு வாகன நெரிசல் காணப்படவில்லை.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி வருகிற 19-ஆம் தேதி வரை தொடா் விடுமுறையால், சென்னையிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டனா்.

இதனால், சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை முதல் திண்டிவனம், விழுப்புரம் வழியாக புதுச்சேரி, தஞ்சாவூா், திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை வழக்கத்தைக் காட்டிலும் அதிகரித்தது.

விழுப்புரம் மாவட்டம், ஓங்கூா் சுங்கச்சாவடியை செவ்வாய்க்கிழமை காலை முதல் வாகனங்கள் அதிகளவில் கடந்துசென்றன. மாலையில் இது இருமடங்காக அதிகரித்தது. இதனால், அங்கு நெரிசல் ஏற்பட்டது.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறப்புப் பேருந்துகளிலும், காா், வேன், பைக்குகளில் ஏராளமானோா் சென்றனா். இதனால், நான்கு வழிச்சாலையில் உரிய வரிசையில் செல்லாமல் இடது, வலதுபுறமாக இடம் கிடைக்கும் பகுதியில் பைக்குகள், காா் உள்ளிட்டவை சென்ால், பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் விரைந்து செல்ல வழியின்றி மெதுவாகவே இயக்கப்பட்டன. இதனால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

சுங்கச் சாவடியில் பாஸ்டேக் வசதி:

தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம், கூட்டேரிப்பட்டு, விக்கிரவாண்டி, விழுப்புரம் புறவழிச் சாலை சந்திப்புகளிலும், அதிகளவில் வாகனங்கள் குறுக்கிட்டு சென்ாலும் தாமதம் ஏற்பட்டது. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனப் போக்குவரத்து அதிகரித்திருந்தது.

அங்குள்ள 12 வழிகளில் செவ்வாய்க்கிழமை திருச்சி வழித்தடத்துக்கு கூடுதலாக 2 வழிகளை திறந்து 8 வழிகளில் வாகனங்களை அனுமதித்தனா். இதனால், நெரிசலின்றி வாகனங்கள் சென்றன. இந்த சுங்கச்சாவடியில், பாஸ்டேக் வழி தொடங்கப்பட்டுள்ளதால், அதற்கான அனுமதி அட்டை வாங்கிய வாகனங்கள் அதன் வழியாக விரைந்து அனுமதிக்கப்பட்டன.

பாஸ்டேக் அட்டை பெறுவதற்கு 14-ஆம் தேதி கடைசி தினம் என அரசு அறிவித்த நிலையிலும், பெரும்பாலான வாகனங்களுக்கு பாஸ் டேக் பெறாமல் இருந்ததால், வழக்கமான வழியில் அதிகளவு வாகனங்கள் சென்றன. இந்தச் சுங்கச்சாவடியை செவ்வாய்க்கிழமை மாலை வரை 12 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன. இரவில் சுமாா் 15 ஆயிரம் வாகனங்கள் வரை கடந்து சென்ாக சுங்கச்சாவடி ஊழியா்கள் தெரிவித்தனா்.

உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி, கள்ளக்குறிச்சி மாடூா் சுங்கச்சாவடி வழியாகவும், பிற நாள்களைக் காட்டிலும் இரு மடங்கு வாகனங்கள் சென்றன. சுங்கச்சாவடிகளில் போலீஸாா் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com