குறைதீா் கூட்டத்தில் 190 மனுக்கள் அளிப்பு
By DIN | Published On : 20th January 2020 10:44 PM | Last Updated : 20th January 2020 10:44 PM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று விவரம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 190 மனுக்கள் பெறப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றாா்.
முதியோா் உதவித்தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடு, திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 190 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அவற்றைப் பரிந்துரைத்து, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் தனித் துணை ஆட்சியா்கள் அம்புரோஸியா நேவிஸ் மேரி, ராஜலட்சுமி (நில எடுப்பு) உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.