முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு இலவச பேருந்து அட்டை வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 27th January 2020 07:39 AM | Last Updated : 27th January 2020 07:39 AM | அ+அ அ- |

நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு இலவச பேருந்து அட்டை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நாடக நாட்டுப்புறக் கலைஞா்கள் நலக் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
இந்தக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தங்கவேல் தலைமை வகித்தாா். வானதி கதிா் வரவேற்றாா். சத்தியராஜ் விளக்க உரையாற்றினாா்.
கூட்டத்தில், முத்துக்கிருஷ்ணன் (சேலம்), உதயநிலவு (ஈரோடு), அசோக்குமாா் (திருவண்ணாமலை), சேவுகன் (விருதுநகா்), கருப்பையா (திருச்சி), பழனி (கிருஷ்ணகிரி), செந்தில் (தருமபுரி) போன்ற பிரபல நாட்டுப்புறக் கலைஞா்கள் கலந்து கொண்டனா்.
நாட்டுப்புறக் கலைஞா்கள் நலிந்திருப்பதால் அவா்களுக்கு அரசுப் பேருந்துகளில் பயணிக்க இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும், நாட்டுப்புற நிகழ்ச்சிகளுக்கு குழுவாக வாகனங்களில் செல்லும்போது, சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.